முகப்பு
வணிகம்

10 கிராமுக்கு ரூ.83,750 என்ற புதிய உச்சத்தை தொட்ட தங்கம்!

அதிகப்படியான கொள்முதல் காரணமாக இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.83,750 ஐ எட்டியது என்று அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்துள்ளது.

Updated On : 29 ஜனவரி 2025, 7:38 pm IST
பகிர்:

புதுதில்லி: நகை வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து அதிகப்படியான கொள்முதல் காரணமாக புதுதில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.910 உயர்ந்து ரூ.83,750 ஐ எட்டியது என்று அகில இந்திய சரஃபா சங்கம் தெரிவித்துள்ளது.

முந்தைய வர்த்தக அமர்வில் 99.9 சதவிகித தூய்மையான தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.82,840 ஆக இருந்தது.

ஜனவரி 1 ஆம் தேதி 10 கிராமுக்கு ரூ.79,390 ஆக இருந்த தங்கம் 10 கிராமுக்கு 5.5 சதவிகிதம் வரை உயர்ந்து ரூ.83,750 ஆக உள்ளது.

Advertisement

Advertisement

99.5 சதவீத தூய்மையான தங்கம் இன்று ரூ.910 உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.83,350 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதே வேளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.82,440 ஆக முடிவடைந்தது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஃப்யூச்சர்ஸ் வர்த்தகத்தில், பிப்ரவரி மாதம் டெலிவரிக்கான தங்க ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ.228 உயர்ந்து ரூ.80,517 என்ற வாழ்நாள் உயர்வை எட்டியது. மேலும், ஏப்ரல் டெலிவரிக்கான ஒப்பந்தங்கள் 0.2 சதவிகிதம் உயர்ந்து இன்று (புதன்கிழமை) முதல் முறையாக 10 கிராமுக்கு தங்கம் ரூ.81,098 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

மார்ச் மாதம் டெலிவரிக்கான வெள்ளி ஆனது நேற்று (செவ்வாய்க்கிழமை) கிலோவுக்கு ரூ.105 என்று உயர்ந்து ரூ.91,156 ஆக முடிந்தது.

உலகளவில், காமெக்ஸ் (Comex) தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு $2,794.70 ஆக வர்த்தகமானது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.56 ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.