சரிவுக்குப் பிறகு தங்கம் விலை அதிரடி ஏற்றம்! 10 கிராமுக்கு ரூ.1,500 உயர்வு!!
தில்லியில் தங்கத்தின் விலை 10 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, 10 கிராமுக்கு ரூ.1,500 உயர்ந்து ரூ.1.26 லட்சத்தை எட்டியது.

புதுதில்லி: தேவை மற்றும் வலுவான உலகளாவிய போக்குகள் காரணமாக, தில்லியில் தங்கத்தின் விலை 10 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, 10 கிராமுக்கு ரூ.1,500 உயர்ந்து ரூ.1.26 லட்சத்தை எட்டியது.
உள்ளூரில் 99.9% தங்கம், கடந்த வாரம் சனிக்கிழமையன்று 10 கிராமுக்கு ரூ. 1,25,300 ஆக இருந்த நிலையில், தற்போது 10 கிராமுக்கு ரூ. 1,500 உயர்ந்து ரூ. 1,26, 800 ஆக உள்ளது. அதே வேளையில் வெள்ளியின் விலையும் முந்தைய அமர்வில் கிலோவுக்கு ரூ. 1.55 லட்சமாக இருந்த நிலையிலிருந்து, கிலோவுக்கு ரூ. 2,000 உயர்ந்து ரூ. 1.57 லட்சமாக உயர்ந்தது.
சமீபத்திய விலைச் சரிவு தங்கத்தை நுகர்வோருக்கு கவர்ச்சிகரமான விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விலை வீழ்ச்சிக்குப் பிறகு நுகர்வோர் ஆர்வம் அதிகரித்திருப்பதை பிரதிபலிக்கும் வகையில், கடந்த வாரம் இந்தியா மற்ரும் சீனாவிலும் திருமண சீசனை முன்னிட்டு தங்கம் வாங்குவதில் மக்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
சர்வதேச சந்தையில், தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 84.27 டாலராக அதிகரித்து 3,622.38 ஆக உயர்ந்த நிலையில், வெள்ளியும் 3.3% உயர்ந்து 42.59 டாலராக உள்ளது.