FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தொடர்ந்து 7வது நாளாக சரியும் தங்கம், வெள்ளி!

உலகளாவிய சந்தையில் தொடர் விற்பனை காரணமாக, தொடர்ந்து 7வது நாளாக தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 2,800 சரிந்து ரூ. 1,35,800 ஆக குறைந்தது.

25 வினாடிகள் முன்பு
தங்கம், வெள்ளி
பகிர்:

புதுதில்லி: உலகளாவிய சந்தையில் தொடர்ச்சியான விற்பனை காரணமாக, தொடர்ந்து 7வது நாளாக தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 2,800 சரிந்து ரூ. 1,35,800 ஆக குறைந்தது.

உள்ளூர் வர்த்தகர்களின் தகவலின் அடிப்படையில், 99.9 சதவீத தூய்மையான தங்கம் நேற்று (செய்வாய்க்கிழமை) 10 கிராமுக்கு ரூ. 1,38,600 ஆக நிலைபெற்றிருந்தது. இதனை தொடர்ந்து, வெள்ளியின் விலை முந்தைய நாள் முடிவில் ரூ. 1,69,500 ஆக இருந்த நிலையில், கிலோவுக்கு ரூ. 5,000 சரிந்து ரூ. 1,64,500 ஆக குறைந்தது.

Advertisement

Advertisement

அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட இந்த பலவீனம் விற்பனையை மேலும் தீவிரப்படுத்தியது. இதற்கிடையில், சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட விற்பனையால், உள்நாட்டில் தங்கம் விலை மேலும் சரிந்து, கடந்த ஆண்டு டிசம்பருக்குப் பிறகு இல்லாத அளவுக்கு சரிந்தது.

வெளிநாட்டுச் சந்தைகளில், ஸ்பாட் தங்கம் அவுன்ஸு ஒன்றுக்கு 78.71 டாலர் சரிந்து 3,770.54 டாலராகவும், வெள்ளி 3 சதவீதத்திற்கும் மேல் சரிந்து அவுன்ஸு ஒன்றுக்கு 45.86 டாலராக குறைந்தது.

summary

Gold prices declined for the seventh straight session on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.