தங்கம் விலை தொடர்ந்து 5-ஆவது நாளாக சரிவு! இன்று (அக். 23) எவ்வளவு தெரியுமா?
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 23, வியாழக்கிழமை) சவரனுக்கு ரூ. 1,400 குறைந்தது.
தங்கம் விலை சென்ற வாரம் தொடக்கம் முதலே குறைந்த வண்ணம் உள்ளது. இந்த வாரம் புதன்கிழமை சவரனுக்கு ரூ. 800, வியாழக்கிழமையில் ரூ. 1,240 குறைந்தது.
இந்த நிலையில், தொடர்ந்து 5-ஆவது நாளாக இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
Advertisement
Advertisement
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.175 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,060-க்கும், சவரனுக்கு ரூ. 1,400 குறைந்து, ரூ. 1,04,480 -க்கு விற்பனையாகிறது.
ஆபரண தங்கத்தின் விலை, கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ. 4,080 குறைந்துள்ளது.
இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ. 225 -க்கும், கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.25 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
சா்வதேச சந்தையில் தங்கம் விலை சரிவுக்கு, அமெரிக்க டாலா் மதிப்பு, அமெரிக்க கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்வு உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது.
Gold prices fall for 5th day
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.