FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மாருதியின் மேட் இன் இந்தியா 'ஜிம்னி' ஜப்பானில் விரைவில் அறிமுகம்!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கதவு மாடலான ஜிம்னி, ஜப்பானிய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி இந்தியா தெரிவித்துள்ளது.

Updated On : 31 ஜனவரி 2025, 6:48 pm IST
பகிர்:

புதுதில்லி: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து கதவு மாடலான ஜிம்னி, ஜப்பானிய சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாருதி சுசூகி இந்தியா தெரிவித்துள்ளது.

குருகிராமை தளமாகக் கொண்ட ஆலையில் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் இந்த எஸ்யூவி ஜப்பானில் அறிமுகமாகிறது. 2024-25 நிதியாண்டில் சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஃப்ரான்க்ஸ்-க்குப் பிறகு ஐந்து கதவு மாடலான ஜிம்னி-யை இரண்டாவதாக வரிசைப்படுத்தியுள்ளது மாருதி.

இது குறித்து மாருதி சுசூகி இந்தியா நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹிசாஷி டேகுச்சி மேலும் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

ஜப்பானில் மேட் இன் இந்தியா, ஜிம்னி 5-டோர் அறிமுகம் செய்வது, எங்கள் உற்பத்தி திறனில் உலகளாவிய மட்டத்தில் சிறந்து விளங்குவதற்கு ஒரு சிறந்த சான்றாகும். 2024-25 நிதியாண்டில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட மாடலாக உள்ளது மாருதி சுசுகியின் ஜிம்னி.

அதே வேளையில் மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா சந்தைகளில் அதன் வெற்றிக்குப் பிறகு, ஜப்பானில் உள்ள வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் இது இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஜிம்னி ஏற்றுமதியானது, 'உலகிற்காக' இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற நமது உறுதிப்பாட்டை மீண்டும் இது உறுதிப்படுத்தியுள்ளது என்றார்.

சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் ஜிம்னி நோமேட் என்ற பெயரில் இந்த மாடலை ஏப்ரல் 3 ஆம் தேதி ஜப்பானில் அறிமுகம் செய்ய உள்ளது.

ஜிம்னி-யின் மூன்று-கதவு பதிப்பு ஏற்கனவே ஜப்பானிய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், தற்போது ஐந்து கதவுகள் கொண்ட மாடல் அறிமுகமாக உள்ளது.

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன ஏற்றுமதியாளரான மாருதி சுசூகி 2024 ஆம் ஆண்டில் சுமார் 100 நாடுகளுக்கு 3.23 லட்சம் வாகனங்களை அனுப்பியுள்ளது. இது நாட்டின் மொத்த பயணிகள் வாகன ஏற்றுமதியில் 43.5 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது.

இதையும் படிக்க: பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிகர லாபம் இரட்டிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments