முகப்பு
வணிகம்

அறிமுகமானது ஓலா எலக்ட்ரிக் ஜென் 3 ஸ்கூட்டர்!

ஓலா எலக்ட்ரிக் இன்று தனது ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் ரூ.1,69,999 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.

Updated On : 31 ஜனவரி 2025, 9:15 pm IST
பகிர்:

புதுதில்லி: ஓலா எலக்ட்ரிக் இன்று தனது ஜென் 3 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மின்சார ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.79,999 முதல் ரூ.1,69,999 வரை வரையறுக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய ஜென் 3 எஸ் 1 ஸ்கூட்டர்களுடன் தனது ஜென் 2 ஸ்கூட்டர்களை தொடர்ந்து விற்பனை செய்ய உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலா ஜென் 2 ஸ்கூட்டர்களுக்கு ரூ.35,000 வரை தள்ளுபடியை நிறுவனம் அறிவித்துள்ளது. இது எஸ் 1 ப்ரோ, எஸ் 1 எக்ஸ் + அதாவது 2 கிலோவாட், 3 கிலோவாட் மற்றும் 4 கிலோவாட் மாடல்களுக்கு தலா ரூ.1,14,999, ரூ.69,999, ரூ.79,999 மற்றும் ரூ.89,999 முதல் தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பவிஷ் அகர்வால் தெரிவித்ததாவது:

எங்கள் முதல் தலைமுறை ஸ்கூட்டர், வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ள மின்சார மாடலாக அமைந்தது. இது நாட்டில் மின்சார வாகன புரட்சியைத் தொடங்கியது.

ஜென் 2 உடன், நிறுவனம் தனது ஸ்கூட்டர்களை ஸ்மார்ட்டாகவும், போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்துவதன் மூலம் அணுகக்கூடியதாகவும் மாற்றியது ஓலா. இன்று ஜென் 3 உடன், இ.வி. 2 வாட் தொழில்துறையை, 'அடுத்த நிலைக்கு' கொண்டு செல்கிறோம்.

ஜென் 3-வில் ஒப்பிடமுடியாத செயல்திறன் மற்றும் நிர்ணயித்த வரையறைகளை மீண்டும் கடைபிடித்து வருகிறது ஓலா. இது தொழில்துறையை மீண்டும் மாற்றும், என்றார் அகர்வால்.

ஜென் 3 போர்ட்ஃபோலியோவில் முதன்மையாக எஸ் 1 ப்ரோ+ 5.3 கிலோ வாட் பேட்டரி விருப்பங்களில் கிடைக்கும் மாடலின் விலை ரூ.1,69,999 மற்றும் 4 கிலோ வாட் மாடலின் விலை ரூ.1,54,999 ஆகும். மேலும் 3 கிலோ வாட் மாடலின் விலை 1,34,999 ஆகும் என்ற நிலையில், 3 கிலோ வாட் மாடலின் விலை ரூ.1,14,999 ஆகும்.

எஸ் 1 எக்ஸ்+ விலை 2 கிலோ வாட்-க்கு ரூ.79,999, 3 கிலோ வாட்-க்கு ரூ.89,999 மற்றும் 4 கிலோ வாட்-க்கு ரூ.99,999, S1 எக்ஸ் + 4 கிலோ வாட் பேட்டரியுடன் கிடைக்கிறது அதன் விலை ரூ.1,07,999 ஆகும்.

ஜென் 3 தளத்தில் முதல் முறையாக இரட்டை ஏபிஎஸ் அதாவது ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரிக் வாகன ஸ்கூட்டர்களுக்கான காப்புரிமை பெற்ற பிரேக்-பை-வயர் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்துகிறது.

ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டியின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் ரூ.73.39 க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இது அதன் முந்தைய முடிவிலிருந்து 9.78 சதவிகிதம் அதிகரித்ததுள்ளது.

இதையும் படிக்க: இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.86.59-ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments