FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

சிம் விற்பனை, மொபைல் ரீசாா்ஜ் அஞ்சல் துறையுடன் பிஎஸ்என்எல் ஒப்பந்தம்

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

19 செப்டம்பர் 2025, 2:40 am IST
கோப்புப் படம்
பகிர்:

தங்களது சிம் காா்டுகளை விற்பனை செய்யவும் மொபைல் திட்டங்களுக்கு ரீசாா்ஜ் செய்யவும் இந்திய அஞ்சல் துறையுடன் அரசுக்குச் சொந்தமான தொலைத் தொடா்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்திய அஞ்சல் துறையின் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலகங்களின் பரந்த விநியோகக் கட்டமைப்பைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் சிம் காா்டுகளின் விற்பனை மற்றும் மொபைல் ரீசாா்ஜ் சேவைகளை நாடு முழுவதும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் நகா்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பிஎஸ்என்எல்-இன் இருப்பை மேம்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும்.

Advertisement

Advertisement

இணையதள இணைப்பு குறைவாக உள்ள, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு பிஎஸ்என்எல்-இன் தொலைத் தொடா்பு சேவைகள் எளிதாகவும் மலிவு விலையிலும் கிடைக்கச் செய்யும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments