ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. பயணம்! ரூ. 44,490க்கு மின்சார ஸ்கூட்டர்!
ஹீரோ நிறுவனத்தில் புதிய மின்சார இருசக்கர வாகனம் குறித்து...
ஹீரோ நிறுவனத்தில் புதிதாக விடா விஎக்ஸ் 2 என்ற புதிய மின்சார இருசக்கர வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மின்சார இருசக்கர வாகனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம் என ஹீரோ நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதன் ஆரம்ப விலையாக ரூ. 44,490 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ விஎக்ஸ் 2 மின்சார இருசக்கர வாகனத்தில் இரண்டு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விஎக்ஸ் 2 பிளஸ் மற்றும் விஎக்ஸ் 2 கோ
Advertisement
Advertisement
இதில் விஎக்ஸ் 2 பிளஸ் மின்சார இருசக்கர வாகனம் 3.4 கிலோ வாட் திறன் பேட்டரி கொண்டது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. வரை பயணிக்கலாம்.
விஎக்ஸ் 2 கோ மின்சார இருசக்கர வாகனம் 2.2 கிலோ வாட் திறன் பேட்டரி திறன் உடையது. இதன்மூலம் 92 கி.மீ. தூரம் வரை பயணிக்கலாம்.
6 கிலோ வாட் மோட்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
3.1 விநாடிகளில் 0 - 40 கி.மீ. வேகத்தை எட்ட முடியும்.
60 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் ஆகும் வகையில் வேகமான சார்ஜிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
விஎக்ஸ் 2 பிளஸ் இருசக்கர வாகன இருக்கையின் கீழ் 33.2 லிட்டர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஎக்ஸ் 2 கோ இருசக்கர வாகன இருக்கையின் கீழ் 27.2 லிட்டர் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டுகள் அல்லது 50,000 கி.மீ. தூரம் வரையில் பேட்டரிக்கு உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஎக்ஸ் 2 கோ மற்றும் விஎக்ஸ் 2 பிளஸ் விலைகள் ஷோரூம்களில் மாற்றத்திற்குட்பட்டவை.
142 km on single charge, price starts at just Rs 44490Hero VIDA VX2 Electric Scooter
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.