FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ராயல் என்பீல்டு பிரியர்களுக்கு... ரூ. 2.79 லட்சத்தில் இவி பைக்!

ரூ. 2.79 லட்சத்தில் ப்ளையிங் ப்ளீ சி6 மின்சார பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றி..

ராயல் என்பீல்டு
பகிர்:

ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் முதல் மின்சார வாகனமான ப்ளையிங் ப்ளீ சி6 இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

கம்பீரமான தோற்றம் கொண்ட ராயல் என்பீல்ட் பல்வேறு மாடல்கள் வந்திருந்தாலும் முதல்முதலாக இவி வாகனம் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றது.

Advertisement

Advertisement

ப்ளையிங் ப்ளீ சி6 சிறப்பம்சங்கள்

3.91 கிலோவாட்ஸ் ஹவர் திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் இதில் 15.4 கிலோவாட்ஸ் திறன் கொண்ட மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது மணிக்கு அதிகபட்சம் 115 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடியது. 60 கி.மீ வேகத்தை 3.7 விநாடிகளில் எட்டும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 154 கி.மீ வரை செல்லும். 20 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய சுமார் 65 நிமிடங்கள் ஆகும்.

124 கிலோ எடை கொண்ட இந்த பைக்கில் அலுமினியம் சட்டகம், வித்தியானமான முன்பக்க கிர் சஸ்பென்ஷன் ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். 3.5 அங்குல தொடுதிரை, கூகுள் மேப்ஸ், வயர்லெஸ் மொபைல் சார்ஜிங், குரூஸ் கண்ட்ரோல் ஆகிய தொழில்நுட்ப வசதியுடன் உள்ளன.

அதோடு ஏபிஎஸ் பிரேக்கிங், டிராக்ஷன் கண்டோல் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. நகர பயணங்களுக்கு ஏற்ற வகையில் சிட்டி ரெயின், ஹைவே, ஸ்போர்ட் என விருப்பதுக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வசதி ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை, பெங்களூரு, புணே, ஹைதராபாத், ஆகிய நகரங்களைத் தொடர்ந்து கொச்சியிலும் தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் முன்பதிவு மற்றும் சோதனை ஓட்ட வசதி கிடைக்கிறது.

ப்ளையிங் ப்ளீ சி6 ஷோரூம் விலை ரூ. 2.79 லட்சமாகும். பேட்டரியை தனியாகப் பயன்படுத்தும் சேவைத் திட்டத்தில் ரூ. 1.99 லட்சத்தில் கிடைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.