புதிய வரவு.. ரூ. 51.99 லட்சத்தில் ஆடி கியூ 3! அப்படி என்ன ஸ்பெஷல்?
ஆடி கியூ 3 சிறப்பம்சங்கள் பற்றி...
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, மூன்றாம் தலைமுறை கியூ 3 சொகுசு எஸ்யுவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ. 51.99 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள மூன்று புதிய தயாரிப்புகளில் இது முதலாவதாகும். மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் இந்த புதிய கியூ 3 கார் உள்நாட்டிலேயே இறக்குமதி செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்ன?
Advertisement
Advertisement
இது 150 கேடபிள்யு ஆற்றலை வெளிப்படுத்துவதுடன் குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் வசதியை கொண்டுள்ளது. இதில் பனோரமிக் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஹெட்-அப் டிஸ்ப்ளே, பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பல்வேறு மேம்பட்ட லைட்டிங் வசதிக்கான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
18 அங்குல அலாய் சக்கரங்கள், பின்புறம் முழுவதும் இணைக்கப்பட்ட எல்இடி விளக்கு அமைப்பு, 12.8 அங்குல தொடுதிரை, வானிலைக்குத் தகுந்தாற்போல ஏசி, மின்சாரத்தில் திறந்து மூடும் பின்புறக் கதவு ஆகிய வசதிகள் உள்ளன.
இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 7 ஸ்பீடு டியூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் நான்கு சக்கர இயக்க வசதியுடன் வருகிறது.
மணிக்கு 100 கி.மீ வேகத்தை 7.1 விநாடிகளில் எட்டும் திறன் கொண்டது. அதிகபட்ச வேகம் 229 கி.மீ. பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.