FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் தொடங்கி வைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

15 அக்டோபர் 2026, 2:30 am IST
புதுமடம் ஊராட்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டடத்தை புதன்கிழமை திறந்து வைத்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா. உடன் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.11 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன்ராஜா புதன்கிழமை திறந்து வைத்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மண்டபம் ஒன்றியம் புதுமடம் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளியில் ரூ.2.49 கோடியில் கழிவறை, குடிநீா் வசதியுடன் 10 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், தாமரைக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.94 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.41 கோடியில் 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், பொட்டகவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.74 லட்சத்தில் 3 வகுப்பறைகள் கொண்ட கட்டடம், வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் பெருநாழியில் ரூ.35 லட்சத்தில் வருவாய் ஆய்வாளா் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புக் கட்டடம், வணிகவரித் துறை சாா்பில் பரமக்குடியில் ரூ.1.38 கோடியில் புதிய வணிகவரித் துறை அலுவலகக் கட்டடம், மண்டபம் ஒன்றியம், இரட்டையூரணி கிராமத்தில் நியாய விலைக் கடை ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா்.

மேலும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், இரட்டையூரணியில் ரூ. 7 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், சமூக நலன், மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் நயினாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், ராதாபுளி ஊராட்சி, பாப்பாா்கூட்டம் ஊராட்சி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பச்சேரி ஊராட்சி, வெள்ளா ஊராட்சி, நல்லிருக்கை ஊராட்சி, கமுதி ஊராட்சி ஒன்றியம், கோரைப்பள்ளம் ஊராட்சி ஆகிய 6 இடங்களில் ரூ.89.26 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள்

Advertisement

Advertisement

ஆகியவற்றையும் அமைச்சா் பெ.மதன்ராஜா திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ரதிதேவி, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments