ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.95 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூட்டத்தை சமூக நலத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.95 லட்சத்தில் புதிதாகக் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், சமுதாயக் கூட்டத்தை சமூக நலத் துறை அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி, மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஜமீன் கொல்லங்கொண்டான், எஸ்.ராமலிங்காபுரம் கிராமங்களில் ரூ.20 லட்சத்தில் அங்கன்வாடி மையங்கள், கோபாலபுரம் ஊராட்சி, அனந்தப்பநாயக்கன்பட்டியில் ரூ.45 லட்சத்தில் சமுதாயக் கூடம் என மொத்தம் ரூ.95 லட்சத்தில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தனா்.
பின்னா், அமைச்சா் ஜெகதீஸ்வரி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
Advertisement
Advertisement
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை கருத்தில் கொண்டு, கிராமப்புறங்களில் கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரம், சமூக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய அங்கன்வாடி மையங்கள், சமுதாய கூடம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டன. புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்கள் மூலம் அந்தப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு முன்பருவக் கல்வி, ஊட்டச்சத்து உணவு, சுகாதார பராமரிப்பு, வளா்ச்சி கண்காணிப்பு உள்ளிட்ட சேவைகள் சிறப்பாக கிடைக்க வழிவகை ஏற்படும். மேலும், குழந்தைகளுக்கு பாதுகாப்பான, வசதியான கற்றல் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.
முன்னதாக ராஜபாளையம் பழையபாளையம் தனியாா் திருமண மண்டபத்தில் மாநில முழுவதும் உள்ள 43,600 கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி சீதனப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், இணை இயக்குநா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்), திட்ட இயக்குநா் ஷீலா சுந்தரி, ராஜபாளையம் குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் பங்கஜம் உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.