மிகவும் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 17டி! என்னென்ன சிறப்புகள்?
ரியல்மி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள்...
ரியல்மி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
பஞ்ஹோல் செல்ஃபி கேமரா, தட்டையான வடிவமைப்பு, பக்கவாட்டில் அமைக்கப்படும் பின்புற கேமரா ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகக் கூறப்படுகின்றன.
ரியல்மி நிறுவனத்தில் கடந்த ஆண்டு வெளியான ரியல்மி 16டி 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைக் காட்டிலும் கூடுதல் சிறப்புகள் உள்ள வகையில் ரியல்மி 17டி வடிவமைக்கப்படுள்ளதாகத் தெரிகிறது.
Advertisement
Advertisement
இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் தேதி குறித்து ரியல்மி நிறுவனம் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.
இதனிடையே இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முந்தைய ஸ்மார்ட்போன்களின் புறவடிவமைப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில், ஒருசில மாற்றங்களை ரியல்மி மேற்கொள்ளவுள்ளது. இந்த மாற்றங்களுடன் இடம்பெறவுள்ள சிறப்பம்சங்கள் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளன.
இதன்படி ரியல்மி 17டி 5ஜி ஸ்மார்ட்போன் 6.8 அங்குல எல்.சி.டி. திரை உடையது.
144Hz திரை கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1,200 nits திறன் உடையது.
மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
கேமரா பிரியர்களுக்காக 50MP பின்புற கேமரா, 16MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
8,000mAh பேட்டரி திறன் 45W சார்ஜிங் திறன்
இந்த அம்சங்களுடன் புரசாஸரில் மாற்றங்கள் இருக்கலாம் என்றும் பேட்டரி திறன், சார்ஜிங் திறனில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.