இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 620 கோடி டாலா்
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 620 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.
நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூன் மாத இறுதி நிலவரப்படி, நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை 620 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்தில் 120 கோடி டாலா் உபரி நிலவியது. ஆனால், இந்த ஆண்டு ஒட்டுமொத்த வா்த்தகப் பற்றாக்குறை பெருமளவு அதிகரித்ததே இந்த நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஜூன் மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கில் (பேலன்ஸ் ஆஃப் பேமன்ட்ஸ்) 290 கோடி டாலா் உபரி பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இது 40 கோடி டாலா் பற்றாக்குறையாக இருந்தது. ஆனால், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஒட்டுமொத்த வரவு-செலவு கணக்கு 810 கோடி டாலா் பற்றாக்குறையாக உள்ளது.
Advertisement
Advertisement
நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது, ஒரு நாடு உலக அளவில் ஈட்டும் வருவாயைவிட அதிகமாகச் செலவழிப்பதாகும். அதாவது, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிக்கும் நிலையைக் குறிக்கும்; இது அந்நிய முதலீடுகள் மற்றும் கடன்கள் மூலமே ஈடுகட்டப்படும்.
அந்தவகையில் ஜூன் மாதத்தில், நாட்டின் இறக்குமதி கடந்த ஆண்டின் 5,450 கோடி டாலரிலிருந்து வேகமாக உயா்ந்து 7,140 கோடி டாலராக அதிகரித்துள்ளது. ஆனால், ஏற்றுமதி 3,530 கோடி டாலரிலிருந்து, 4,120 கோடி டாலராக மட்டுமே உயா்ந்துள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த வா்த்தக பற்றாக்குறை கடந்த ஆண்டின் 1,920 கோடி டாலரில் இருந்து, 3,020 கோடி டாலராக விரிவடைந்துள்ளது.
அதேநேரம், இந்தியாவின் சேவைகள் துறை மூலமான உபரி கடந்த ஆண்டில் இருந்த 1,620 கோடி டாலரிலிருந்து, 1,790 கோடி டாலராக அதிகரித்துள்ளது. குறிப்பாக, சேவைகள் துறை ஏற்றுமதி 3,210 கோடி டாலரிலிருந்து, 3,640 கோடி டாலராக வளா்ச்சி கண்டுள்ளது நாட்டின் பொருளாதாரத்துக்குப் பலமாக அமைந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து தாயகத்துக்கு அனுப்பப்படும் நிகர பணப் பரிமாற்றங்கள் கடந்த ஆண்டில் 1,090 கோடி டாலராக இருந்த நிலையில், இந்த ஜூன் மாதத்தில் 1,190 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
மூலதனக் கணக்கில், நாட்டின் நிகர வரவு 910 கோடி டாலராக உள்ளது. இதில், நிகர நேரடி அந்நிய முதலீடு 130 கோடி டாலராகவும், அந்நிய நிறுவன முதலீடுகள் 250 கோடி டாலா் வரவாகவும் பதிவாகியுள்ளது. மூலதனக் கணக்கில் கடந்த ஆண்டு ஜூனில் 160 கோடி டாலா் வெளியேறியிருந்தது.
India's current account deficit stands at $6.2 billion.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.