FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மதிப்புமிக்க 4 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 92,995 கோடியாக அதிகரிப்பு!

மதிப்புமிக்க 10 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் கூட்டுச் சந்தை மதிப்பு ரூ. 92,995.48 கோடியாக அதிகரிப்பு.

Updated On : 12 ஜூலை 2026, 7:53 pm IST
சந்தை மூலதனம்
பகிர்:

புதுதில்லி: கடந்த வாரம், அதிக மதிப்புமிக்க முதல் 10 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்களின் கூட்டுச் சந்தை மதிப்பு ரூ. 92,995.48 கோடி அதிகரித்தது. இதில் எச்.டி.எஃப்.சி. வங்கி மற்றும் ஏர்டெல் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக அமைந்தன.

மேற்கு ஆசியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்டவையால், தொடர்ந்து நான்கு வாரங்களாக நீடித்த ஏற்றப் போக்கு முடிவுக்கு வந்தது.

கச்சா எண்ணெய் விலை சரிவு, முதல் காலாண்டுக்கான ஊக்கமளிக்கும் தகவல்கள் மற்றும் பருவமழையின் முன்னேற்றம் உள்ளிட்டவையால் வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை நேர்மறையாக இருந்தது. ஆனால், ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரித்ததால் வாரத்தின் மத்தியில் சந்தை பலவீனமடைந்தது. எனினும், இறுதி இரண்டு வர்த்தக அமர்வுகளில் முக்கியக் குறியீடுகள் இழப்பின் பெரும்பகுதியை ஈடுசெய்தன.

Advertisement

Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எஃப்.சி. வங்கி, பார்தி ஏர்டெல் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகியவை நிறுவனங்கள் லாபம் ஈட்டிய நிலையில், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 49,294.13 கோடி சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து எச்.டி.எஃப்.சி. வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 35,808.09 கோடி அதிகரித்து ரூ. 12,69,454.42 கோடியாகவும், ஏர்டெல்லின் சந்தை மதிப்பு ரூ. 34,896.92 கோடி அதிகரித்து ரூ. 11,98,774.22 கோடியாகவும், எல்ஐசி ரூ. 16,065.5 கோடி அதிகரித்து அதன் மதிப்பீடு ரூ. 5,60,205.05 கோடியாகவும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பீடு ரூ. 6,224.97 கோடி அதிகரித்து ரூ. 17,71,206.33 கோடியாக உயர்ந்தது.

இருப்பினும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மூலதனம் ரூ. 12,088.65 கோடி குறைந்து ரூ. 5,04,997.65 கோடியாகவும், லார்சன் & டூப்ரோ மதிப்பீடு ரூ. 11,040.23 கோடி குறைந்து ரூ. 5,42,938.40 கோடியாகவும், டிசிஎஸ் சந்தை மூலதனம் ரூ. 8,574.87 கோடி குறைந்து ரூ. 7,48,600.40 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் சந்தை மூலதனம் ரூ. 7,813.58 கோடி குறைந்து ரூ. 6,35,327.78 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் ரூ. 6,315.32 கோடி குறைந்து ரூ. 10,05,379.71 கோடியாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மதிப்பீடு ரூ. 3,461.48 கோடி குறைந்து ரூ. 9,56,430.44 கோடியாகவும் சரிந்தன.

summary

The combined market valuation of four of the top-10 most valued firms jumped Rs 92,995.48 crore last week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments