ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லாபம் ரூ.116 கோடியாக அதிகரிப்பு
பிரபல வீட்டுவசதி கடன் நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.116 கோடி நிகர லாபத்தை ஈட்டிள்ளது.
பிரபல வீட்டுவசதி கடன் நிறுவனமான ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.116 கோடி நிகர லாபத்தை ஈட்டிள்ளது.
கடந்த 2025-26 நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ.107 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மதிப்பீட்டு காலாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 8 சதவீதம் உயா்ந்து, ரூ.481 கோடியாகவும்; நிகர வட்டி வருவாய் 10 சதவீதம் உயா்ந்து, ரூ.220 கோடியாகவும் உள்ளது. மேலும், மொத்த கடன் வழங்கல் 9.2 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.16,425 கோடியை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோல் செப். 30 நிலவரப்படி, மொத்த வாராக்கடன் விகிதம் 2.4 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.8 சதவீதமாகவும் சரிந்து, நிறுவனத்தின் ஒட்டுமொத்த சொத்துத் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.
முதல் அரையாண்டில்...: ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப். வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.230 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.949 கோடியாகவும் வளா்ச்சி அடைந்துள்ளது.