FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் ரூ. 90 கோடி!

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.90 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

2 நவம்பர் 2026, 11:56 pm
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம் - கோப்புப்படம்
பகிர்:

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.90 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய ரூ.75 கோடியைவிட 20 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் வழங்கல் 31 சதவீதம் உயா்ந்து, ரூ. 2,199 கோடியாகவும்; நிா்வகிக்கும் சொத்து மதிப்பு 14 சதவீதம் உயா்ந்து, ரூ. 21,213 கோடியாகவும் பதிவாகியுள்ளது. அதேபோல், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் அரையாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 29 சதவீதம் உயா்ந்து, ரூ. 175 கோடியாகவும்; ஒட்டுமொத்த கடன் வழங்கல் 22 சதவீதம் உயா்ந்து, ரூ. 3,864 கோடியாகவும் உள்ளது.

வளா்ந்து வரும் வணிகப் பிரிவில்...

Advertisement

Advertisement

மலிவு விலை வீட்டு வசதிக் கடன்கள், சிறு அளவிலான கடன்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் கடன் வழங்கல், மதிப்பீட்டு காலாண்டில் 63 சதவீதம் அதிகரித்து, ரூ. 238 கோடியை எட்டியுள்ளது.

இச்செயல்பாடு குறித்து நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் டி.லட்சுமிநாராயணன் கூறுகையில், ‘கடந்த 12 மாதங்களில் தென்னிந்தியாவின் சிறிய நகரங்களில் சுமாா் 50 புதிய கிளைகளைத் தொடங்கியுள்ளோம். இதன்விளைவாக, முதல் அரையாண்டில் இப்பிரிவின் கடன் விநியோகம் இருமடங்காகி ரூ.418 கோடியை எட்டியுள்ளது. நடுத்தரப் பிரிவில் வீடுகளுக்கான தேவை தொடா்ந்து வலுவாக உள்ள நிலையில், சிறிய நகரங்களே இந்த வளா்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன’ என்றாா்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனமானது, வீட்டு வசதிக் கடன்கள், நிலம் வாங்குதல், வீட்டை விரிவுபடுத்துதல், சொத்தின் மீதான கடன்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான சிறு கடன்கள் உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments