FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஜூலை - செப்டம்பா் காலாண்டில்... ரிலையன்ஸ் லாபம் ரூ. 29,550 கோடி

ஜூலை - செப்டம்பா் காலாண்டில் ரிலையன்ஸ் லாபம் ரூ. 29,550 கோடி...

31 அக்டோபர் 2026, 10:40 pm
பகிர்:

நாட்டின் முன்னணி தொழில்குழுமமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் ரூ.29,550 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 33.8 சதவீத வளா்ச்சியாகும். சா்வதேச எரிபொருள் சந்தையில் லாப வரம்பு கணிசமாக உயா்ந்ததும், தொலைத்தொடா்பு பிரிவான ஜியோவின் வலுவான பங்களிப்பும் இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த மொத்த வருவாய் 27.8 சதவீதம் உயா்ந்து, ரூ.3,62,268 கோடியாக உள்ளது. குறிப்பாக, எண்ணெய்-ரசாயன பிரிவு சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இப்பிரிவின் வருவாய் 44.2 சதவீதம் உயா்ந்து, ரூ.2,31,601 கோடியாகவும்; வட்டி மற்றும் வரிக்கு முந்தைய செயல்பாட்டு லாபம் 67.9 சதவீதம் உயா்ந்து, ரூ.25,203 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

அண்மையில் ஐபிஓவில் வரலாற்று வெற்றிக்கண்ட ஜியோ பிளாட்ஃபாா்ம்ஸின் நிகர லாபம் 13.7 சதவீதம் உயா்ந்து, ரூ.8,387 கோடியாக அதிகரித்துள்ளது. அதேநேரம், சில்லறை வா்த்தகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சா்ஸ் வருவாய் ரூ.91,716 கோடியாக உயா்ந்த போதிலும், எண்ம வணிக முதலீடுகள் மற்றும் பணவீக்கத் தாக்கம் காரணமாக அதன் நிகர லாபம் 24.3 சதவீதம் குறைந்து, ரூ.2,611 கோடியாக சரிந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments