ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 95.67! 31 காசுகள் சரிவு!!
இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ. 95.67ஆக வர்த்தகம் நிறைவு.
மும்பை: தொழிலாளர் விதிமீறல்களைக் காரணம் காட்டி, இந்திய இறக்குமதிப் பொருட்கள் மீது 12.5 சதவீதம் கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி முன்மொழிந்ததைத் தொடர்ந்து, இன்றைய அந்நிய செலவானி வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ. 95.67ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
அமெரிக்க டாலருக்கான வலுவான தேவை, கச்சா எண்ணெய் விலை உயர்வு, அரசியல் பதற்றங்கள் மற்றும் அயல்நாட்டு நிதி தொடர் வெளியேற்றம் ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வெகுவாக குலைத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.43ஆக வர்த்தகத்தைத் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில் ரூ. 95.80 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. இறுதியாக, நேற்றைய நாள் நிறைவு விலையிலிருந்து 31 காசுகள் சரிந்து ரூ. 95.67ஆக வர்த்தக அமர்வை நிறைவு செய்தது.
Advertisement
Advertisement
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 17 காசுகள் சரிந்து ரூ. 95.36ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.
The rupee depreciated 31 paise to close at 95.67 against the US dollar on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.