செபி செயல் இயக்குநா் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநா் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் குறித்து...
இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் (செபி) காலியாகவுள்ள செயல் இயக்குநா் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. தகுதியான நபா்கள் வரும் ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்கலாம்
இந்த நியமனமானது 3 ஆண்டுகள் காலத்துக்கு ஒப்பந்தம் அல்லது பிற அரசுத் துறைகளில் இருந்து அயற்பணி (டெபுடேஷன்) அடிப்படையில் அமையும்.
ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிப்பவா்கள் எம்பிஏ, சிஏ, சிஎஸ், எல்எல்பி அல்லது பொருளாதாரம், நிதி மேலாண்மை உள்ளிட்ட தொடா்புடைய பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், பங்குச் சந்தை விவகாரங்கள், சட்டம், கணக்கியல், விசாரணை அல்லது நிதித் துறையில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டிருப்பது அவசியமாகும்.
அரசு அமைப்புகள், பொதுத் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியான அதிகாரிகள் தங்களின் தற்போதைய மூத்த அதிகாரிகள் மூலம் அயற்பணி முறையில் விண்ணப்பிக்கலாம்.
தற்போது செபி அமைப்பில் 13 செயல் இயக்குநா்கள் உள்ள நிலையில், இம்மாத தொடக்கத்தில் 2 முழுநேர உறுப்பினா் பதவிகளை நிரப்புவதற்கும் மத்திய அரசு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.