கட்டணங்களை வசூலிக்க எல்.ஐ.சி. கிளைகள் நாளை இயங்கும்!
காப்பீட்டுதாரர்கள் தங்கள் காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு உதவும் வகையில், நாடு முழுவதும் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளைகள் நாளை (மார்ச் 31) அன்று திறந்திருக்கும்.
புதுதில்லி: காப்பீட்டுதாரர்கள் தங்கள் காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளைகள் நாளை (மார்ச் 31) திறந்திருக்கும்.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, மார்ச் 31 பொது விடுமுறையாகும்.
காப்பீட்டுதாரர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாதிருப்பதை உறுதிசெய்யும் வகையில், செவ்வாய்க்கிழமை(மார்ச் 31) ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் கிளைகளில் வழக்கமான அலுவல் பணிகள் நடைபெறும் என்று எல்.ஐ.சி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மார்ச் 25, 2026 அன்று வெளியிட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது.
Life Insurance Corporation of India across the country will remain open on March 31 to help pay their insurance premiums.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.