முகப்பு
வணிகம்

ரூ. 184 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற எச்எஃப்சிஎல்!

ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை விநியோகிப்பதற்கான, சுமார் ரூ. 183.95 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக எச்எஃப்சிஎல் தெரிவித்துள்ளது.

எச்எஃப்சிஎல்
பகிர்:

புதுதில்லி: தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமான எச்எஃப்சிஎல் லிமிடெட், ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை விநியோகிப்பதற்கான, சுமார் ரூ. 183.95 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக இன்று தெரிவித்தது.

சர்வதேச வாடிக்கையாளர்களால், வழங்கப்பட்டுள்ள இந்த ஆர்டர்கள், ஆகஸ்ட் 2026-க்குள் நிறைவேற்றி முடிக்கப்பட உள்ளதாக, நிறுவனம் தெரிவித்தது.

முதல் ஆர்டரின் மதிப்பு சுமார் ரூ. 108.80 கோடி ஆகும். 2வது ஆர்டரின் மதிப்பு சுமார் ரூ. 75.15 கோடி ஆகும்.

Advertisement

இந்த ஆர்டர் மூலம், நிறுவனத்தின் உற்பத்தித் திறன், தொழில்நுட்பச் சிறப்பு மற்றும் தயாரிப்புத் தரம் ஆகியவற்றை நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

summary

Telecom gear maker HFCL Ltd said it has secured export orders worth USD 19.32 million for the supply of optical fibre cables.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.