ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ் தரும் புதிய கார்! அறிமுகம் செய்கிறது மாருதி!
மாருதி சுசூகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய காரை அறிமுகம் செய்யவுள்ளது குறித்து..
மாருதி சுசூகி நிறுவனத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஃப்ரான்க்ஸ் கார், வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த காரின் மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பை மாருதி சுசூகி நிறுவனம் விரைவில் வெளியிடவுள்ளது.
பல்வேறு மேம்பாடுகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் மைலேஜ், லிட்டருக்கு 35 கி.மீ. வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம் பட்ஜெட் விலையில் நடுத்தரக் குடும்பத்தினரைக் கவரும் வகையிலான கார்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஃப்ரான்க்ஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
Advertisement
Advertisement
இந்த கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் சீரான வரவேற்பைப் பெற்ற நிலையில், காரின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த மாடலில் பல்வேறு நவீன மேம்பாடுகளை மாருதி சுசூகி மேற்கொள்ளவுள்ளது.
மேம்படுத்தப்பட்ட ஃப்ரான்க்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு, வென்டிலேஷன் வசதியுடன் கூடிய இருக்கைகள் வழங்கப்படவுள்ளன.
தற்போதைய மாடலில் 2 என்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அவை 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் ஆகியவை ஆகும். ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த 2 என்ஜின் ஆப்ஷன்களும் தொடர்ந்து வழங்கப்பட்டாலும், கூடுதலாக 1.2 லிட்டர் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ட்ராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜினால் மைலேஜ் அதிகரிக்கும். மேம்படுத்தப்பட்ட இந்த காரில் ஒரு லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
New Car Delivering 35 km per Liter Introduced by Maruti suzuki
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.