அதிரடி சலுகையில் ஆப்பிள் ஐபோன் 17 வாங்கலாம்! ஃபிளிப்கார்ட் சலுகைகள் என்னென்ன?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது குறித்து..
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 17 ஸ்மார்ட்போன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இணைய விற்பனை தளமாக ஃபிளிப்கார்ட்டில் சலுகை மற்றும் தள்ளுபடியின் மூலம் குறைந்த விலையில் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை வாங்கலாம்.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், ஸ்மார்ட்போன்களில் உயர்தர தயாரிப்பாக உள்ளது. இதனால், ஐபோன் வாங்குவதை பலரும் தங்கள் விருப்பப் பட்டியலில் ஒன்றாகவே வைத்துள்ளனர்.
Advertisement
Advertisement
இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் ஐபோன் 17 முதலிடத்தில் உள்ளது.
ஐபோன் வாங்க நினைத்தவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 256ஜிபி நினைவகம் உடைய ஐபோன் 17 விலை ரூ. 82,900 ஆக உள்ளது.
எச்.டி.எஃப்.சி., எஸ்பிஐ வங்கிக் கடன் அட்டை மூலம் வாங்கினால் ரூ. 3,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய ஸ்மார்ட்போனை கொடுத்துவிட்டு ஐபோன் 17 வாங்கினால் கூடுதலாக ரூ. 5,000 தள்ளுபடி உண்டு. இதுமட்டுமின்றி கடன் அட்டை தவணை முறையில் ரூ. 4,500 சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் மூலம் ஐபோன் 17 ஸ்மார்ட்போனை ரூ. 75,900க்கு வாங்கலாம்.
Apple iPhone 17 Hits Lowest Price On Flipkart: Avail Offers And Discounts
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.