FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதீத செலவினங்கள் காரணமாக Q2 டாடா கெமிக்கல்ஸ் இழப்பு ரூ. 50 கோடி!

டாடா கெமிக்கல்ஸ், அதன் முக்கிய வருவாய் சரிந்தும், உயர்ந்த எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் ஆகியவையால் நஷ்டத்தை பதிவு செய்தது.

52 வினாடிகள் முன்பு
டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட்
பகிர்:

மும்பை: டாடா கெமிக்கல்ஸ் லிமிடெட், நிதியாண்டின் 2வது காலாண்டில், அதன் முக்கிய வருவாய் சரிந்தும், உயர்ந்த எரிசக்தி மற்றும் தளவாடச் செலவுகள் உள்ளிட்டவையால் ரூ. 50 கோடி நஷ்டத்தை பதிவு செய்த அதே வேளையில், கடந்த ஆண்டின் இதே காலாண்டில், அதன் நிகர லாபம் ரூ. 154 கோடியாக இருந்தது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 3,877 கோடியாக இருந்த அதன் செயல்பாட்டு வருவாய், மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில் 8 சதவீதம் அதிகரித்து ரூ. 4,177 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த வளர்ச்சிக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதிக விற்பனை அளவு, இந்தியாவில் அதிக வருவாய் மற்றும் கென்யாவில் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது இதில் முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement

Advertisement

சவாலான உலகச் சந்தைச் சூழலிலும், விற்பனை மற்றும் உற்பத்தி அதிகரிப்பு, செயல்பாட்டுத் திறன் மேம்பாடு, செலவுக் கட்டுப்பாடு ஆகியவை பாதிப்புகளைக் குறைக்க உதவியது. இருப்பினும், சோடா ஆஷ் விலை சரிவு மற்றும் மூலப்பொருட்கள், எரிசக்தி, போக்குவரத்துச் செலவு உயர்வு உள்ளிட்டவை நிறுவனத்துக்கு சவாலாக இருந்ததாக டாடா கெமிக்கல்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான ஆர். முகுந்தன் தெரிவித்தார்.

சோடா ஆஷ் சந்தையில் உலகளாவிய உபரி நிலை, மந்தமான தேவை மற்றும் மாறிவரும் வர்த்தகப் போக்குகள் காரணமாக விலைகள் தொடர்ந்து அழுத்தத்தில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

summary

Tata Chemicals Limited reported a consolidated loss of Rs 50 crore for the quarter ended September 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.