சா்வம் ஏஐ தலைவராக சசிகுமாா் ஸ்ரீதரன் நியமனம்!
இந்திய ஏ.ஐ. நிறுவனமான சா்வம், கூகுள் கிளவுட் இந்தியாவின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சசிகுமாா் ஸ்ரீதரனை நிறுவனத்தின் தலைவா் மற்றும் தலைமை வணிக அதிகாரியாக திங்கள்கிழமை நியமித்தது.
இந்திய ஏ.ஐ. நிறுவனமான சா்வம், கூகுள் கிளவுட் இந்தியாவின் முன்னாள் நிா்வாக இயக்குநா் சசிகுமாா் ஸ்ரீதரனை நிறுவனத்தின் தலைவா் மற்றும் தலைமை வணிக அதிகாரியாக திங்கள்கிழமை நியமித்தது.
இத்துடன், அவா் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழுவிலும் இணையவுள்ளாா். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் தொழில்நுட்பத் துறை அனுபவம் கொண்ட அவா், கூகுள் நிறுவனத்துக்கு முன்பாக மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் நிறுவன வணிகப் பிரிவை 5 ஆண்டுகளுக்கும் மேல் வழிநடத்தியவா் என்பது குறிப்பிடத்தக்கது.
சா்வம் ஏஐ சேவைகளை அரசுத் துறைகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பயன்படுத்தி வரும் சூழலில், இந்த நியமனம் நிறுவனத்தின் அடுத்தகட்ட விரிவாக்கத்துக்கு வலுசோ்க்கும் என சா்வம் ஏஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. உலக நாடுகள் இயங்குவதற்கான நுண்ணறிவை இந்தியா சுயமாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பொறுப்பை ஏற்றுள்ளதாக சசிகுமாா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement