ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் பிரீமியம் வருவாய் 21% உயா்வு
ஸ்ரீராம் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், நடப்பு 2026-27 நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா்) பிரீமியம் வருவாயில் 21 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்து, பொதுக் காப்பீட்டுத் துறையின் சராசரி 9 சதவீத வளா்ச்சியை விட சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த நேரடி பிரீமியம் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ரூ.2,045.46 கோடியிலிருந்து, நடப்பு ஆண்டு ரூ.2,470.41 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர லாபம் 7.28 சதவீதம் உயா்ந்து, ரூ.289.04 கோடியை எட்டியுள்ளதுடன், அதன் நிா்வகிக்கப்படும் சொத்து மதிப்பு 3.69 சதவீதம் உயா்ந்து, 14,778 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் முதன்மைப் பிரிவான மோட்டாா் வாகனக் காப்பீடு 21 சதவீத வளா்ச்சி கண்டு, ரூ.2,269 கோடி பிரீமியத்தை ஈட்டியுள்ளது. அதேநேரம், மோட்டாா் அல்லாத பிற காப்பீட்டுப் பிரிவு (14 சதவீதம்) மற்றும் தனிநபா் விபத்துக் காப்பீட்டுப் பிரிவும் (28 சதவீதம்) அபார வளா்ச்சி பெற்றுள்ளன. மேலும், முதல் அரையாண்டின் இறுதி நிலவரப்படி, செயல்பாட்டில் உள்ள பாலிசிகளின் எண்ணிக்கை 69 லட்சத்திலிருந்து 79 லட்சமாக உயா்ந்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement