நாளை முதல் அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 முதல் ரூ. 4 வரை உயர்வு!
செலவுகள் கடுமையாக அதிகரித்ததைக் காரணம் காட்டி, நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை பால் விலையை அமுல் உயர்த்த உள்ளது.
புதுதில்லி: அமுல் பிராண்டின் கீழ் பொருட்களை விற்பனை செய்யும் முன்னணி பால் நிறுவனமான ஜி.சி.எம்.எம்.எஃப் உள்ளீட்டுச் செலவுகள் கடுமையாக அதிகரித்ததைக் காரணம் காட்டி, நாளை (வியாழக்கிழமை) முதல் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை பால் விலையை உயர்த்த உள்ளது.
3% கொழுப்புச் சத்து கொண்ட அமுல் தாஜா டோன்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதேபோல் 6% கொழுப்புச் சத்து கொண்ட அமுல் கோல்டு பாலின் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டுள்ளது.
கடைசியாக இந்த ஆண்டு மே மாதத்தில் விலை உயர்ந்தது. பால் உற்பத்தி மற்றும் பதப்படுத்துதலுக்கான உள்ளீட்டுச் செலவுகள் கடுமையாக உயர்ந்ததன் காரணமாக இந்த விலை உயர்வு என நிறுவனம் தெரிவித்தது.