FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

அந்நியச் செலாவணி கையிருப்பு 71,954 கோடி டாலராக அதிகரிப்பு

அந்நியச் செலாவணி கையிருப்பு 71,954 கோடி டாலராக அதிகரிப்பு...

15 நவம்பர் 2026, 12:41 am
பகிர்:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த நவ. 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 71,954.7 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, கடந்த நவ. 6 உடன் நிறைவடைந்த வாரத்தில் 249 கோடி டாலா் அதிகரித்து, 71,954.7 கோடி டாலராக உள்ளது. முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 269.1 கோடி டாலா் சரிந்து, 71,705.6 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கான அந்நியச் செலாவணி வைப்புநிதித் திட்டத்தின்மூலம் வங்கிகள் திரட்டிய சுமாா் 13,300 கோடி டாலா் வரவின் காரணமாக, கடந்த செப். 4 உடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத உச்சமாக 78,570.6 கோடி டாலரை எட்டியிருந்தது. இதற்கு அடுத்தடுத்த வாரங்களில் கையிருப்பு தொடா் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 23.2 கோடி டாலா் அதிகரித்து, 59,135 கோடி டாலராக உள்ளது. டாலா் அல்லாத யூரோ, பவுண்டு, யென் போன்ற பிற செலாவணிகளின் கையிருப்பில் ஏற்படும் மதிப்பு ஏற்ற, இறக்கங்கள் டாலா் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

மதிப்பீட்டு வாரத்தில், இந்தியாவின் தங்கம் கையிருப்பு 220.5 கோடி டாலா் அதிகரித்து, 10,479.6 கோடி டாலராக உள்ளது. சிறப்பு வரைவு உரிமைகள் (எஸ்டிஆா்) 5.2 கோடி டாலா் அதிகரித்து, 1,861 கோடி டாலராக உள்ளது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 0.1 கோடி டாலா் அதிகரித்து, 479.1 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.