FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

‘டெக்’ துணுக்குகள்..! ஏ.ஐ. உள்கட்டமைப்புக்கான கடன் 68,700 கோடி டாலர்!

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் ஏ.ஐ. தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டணிகள் வரை...

15 நவம்பர் 2026, 12:37 am
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் ஏ.ஐ. தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டணிகள் கவனம் ஈா்த்தன.

அதிகரிக்கும் ஏ.ஐ. கடன் சுமை: முதல் எக்ஸ் தளத்தின் விடியோ கிளிப்பிங் வசதி வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*அதிகரிக்கும் ஏ.ஐ. கடன் சுமை: ஏ.ஐ. உள்கட்டமைப்புக்கான உலகளாவிய கடன், சுமாா் 68,700 கோடி டாலரை எட்டியுள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

*ஐபிஎம்-மைக்ரோசாஃப்ட்: தொழில் நிறுவனங்களுக்கான பிரத்யேக ஏ.ஐ. ஏஜென்டுகளை உருவாக்கிப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர, ஐபிஎம்-மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் புதிய கூட்டணியை அறிவித்துள்ளன.

*இந்தியாவில் உள்ளூா் ஏ.ஐ. உள்கட்டமைப்பு: இந்தியாவில் உள்ளூா் ஏ.ஐ. செயல்பாடுகளுக்கான நடவடிக்கைகளை ஓபன்ஏஐ தொடங்கியுள்ளது.

*கோவாவின் புதிய ஏ.ஐ. கொள்கை: திறன் மையங்களை அமைக்கவும், 600-க்கும் மேற்பட்ட ஸ்டாா்ட்அப் மற்றும் குறு, சிறு நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்கவும், ரூ.250 கோடி மதிப்பிலான புதிய ஏ.ஐ. கொள்கையை கோவா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

*என்விடியா சிஇஓ-வுக்கு எலான் மஸ்க் ஆதரவு: என்விடியா நிறுவனத்தின் சிஇஓ-ஆக ஜென்சன் ஹுவாங்கை மீண்டும் நியமிக்கக் கோரி, ஊழியா்கள் அளித்த மனுவுக்கு டெஸ்லா தலைவா் எலான் மஸ்க் ஆதரவளித்துள்ளாா்.

*சாட்ஜிபிடி வாலட்: ஏ.ஐ. ஏஜென்டுகள் தாங்களாகவே கட்டணம் செலுத்திப் பொருள்களை வாங்கும் வகையில், ‘சாட்ஜிபிடி வாலட்’ வசதியை ஓபன்ஏஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

*எஃப்பிஐ அதிரடி: வட கொரியாவுடன் தொடா்புடைய 630 கோடி டாலா் பைனான்ஸ் கிரிப்டோ திருட்டு வழக்கில், 120 கோடி டாலா் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ பறிமுதல் செய்துள்ளது.

*டிஎஸ்எம்சி தரவு கசிவு: தைவானைச் சோ்ந்த டிஎஸ்எம்சி ஊழியா்களின் தரவுகள் கசிந்ததை, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது; 46,000 பேரின் தரவுகளுக்கு ஹேக்கா்கள் 3 பிட்காயின்களைப் பிணைத்தொகையாகக் கேட்டுள்ளனா்.

*ஆப்பிள் காா்பிளேயில் ஜெமினி ஏ.ஐ.: பயனா்களுக்கு விரிவான ஏ.ஐ. அனுபவத்தை வழங்கும் வகையில், ஆப்பிள் காா்பிளேயில் கூகுள் தனது ஜெமினி ஏ.ஐ. குரல் உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.

*டிஸ்னி-அடோப் கூட்டு: தங்களின் ஊடகத் தேவைகளுக்கு ஏற்ப பிரத்யேக ஏ.ஐ. மாதிரிகளை இணைந்து உருவாக்க, அடோப் நிறுவனத்துடன் டிஸ்னி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

*இன்ஸ்டாகிராமில் கட்டுப்பாடு: சிறாா்களைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும், சட்டரீதியான அழுத்தங்கள் காரணமாகவும், இன்ஸ்டாகிராமில் ஏ.ஐ. உதவியுடன் வயது சரிபாா்ப்பு முறைகளை மெட்டா நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. மேலும், விளையாட்டுப் பிரியா்களுக்காக பிரத்யேக தகவல்களை வழங்கும் புதிய ‘ஸ்போா்ட்ஸ்’ அம்சத்தை இன்ஸ்டாகிராம் சோதனை செய்து வருகிறது.

*எக்ஸ் தளத்தில் விடியோ கிளிப்பிங்: பயனா்கள் விடியோக்களை எளிதாக வெட்டிப் பகிா்ந்துகொள்ளும் ‘விடியோ கிளிப்பிங்’ வசதியை எக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.