FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உணவுப் பொருட்களின் விலை உயர்வு எதிரொலி: ஹோட்டல்களில் சாப்பிடுவதைத் தவிர்க்கும் கேரளக் குடும்பங்கள்!!

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கேரளாவில் ஹோட்டல் மற்றும் உணவகங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

36 வினாடிகள் முன்பு
உணவுப் பொருள்கள் - பிரதிப் படம்
பகிர்:

திருவனந்தபுரம்: அத்தியாவசியப் பொருட்கள் (அரிசி, வெங்காயம், காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய்) ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கேரளாவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

உணவகங்களின் செலவுகள் அதிகரித்துள்ளதுடன், குடும்பங்களுடன் வெளியே சென்று சாப்பிடுவதைக் மக்கள் குறைத்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என ஹோட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Advertisement

Advertisement

கேரள ஹோட்டல் மற்றும் உணவக சங்கம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்கம் தேசிய சராசரியைவிடக் கணிசமாக அதிகமாக இருப்பதால், ஹோட்டல் தொழில்துறை கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

அரிசி, வெங்காயம், காய்கறிகள், சமையல் எண்ணெய், மளிகைப் பொருட்கள் மற்றும் எல்பிஜி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஹோட்டல்கள் குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தினசரி இயக்கச் செலவுகள் அதிகரித்துள்ளது.

விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு நாட்களில் குடும்பங்கள் ஹோட்டல்களுக்குச் செல்வதை பொதுமக்கள் அதிகளவில் குறைத்து வருவதால், குறிப்பாக குடும்ப வாடிக்கையாளர்களைச் சார்ந்திருக்கும் நிறுவனங்களின் வணிகம் பாதிக்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

summary

Rising prices of rice, onions, vegetables and cooking oil are squeezing hotels and restaurants in Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.