FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

உற்பத்தித் திறனை உயா்த்த ரூ.80,000 கோடி முதலீடு: ஹிந்துஸ்தான் ஜிங்க்

உலோக உற்பத்தித் திறனை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இருமடங்காக உயா்த்துவதற்காக ரூ.80,000 கோடி முதலீட்டில் விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு ஒப்புதல்

43 வினாடிகள் முன்பு
ஹிந்துஸ்தான் ஜிங்க்
பகிர்:

உலோக உற்பத்தித் திறனை அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் இருமடங்காக உயா்த்துவதற்காக ரூ.80,000 கோடி முதலீட்டில் விரிவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்த வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தின் இயக்குநா்கள் குழு திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

நாட்டில் எஃகு, உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சியால் துத்தநாகத்தின் (ஜிங்க்) தேவை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தித் திறனை ஆண்டுக்கு 11 லட்சம் டன்னிலிருந்து, 20 லட்சம் டன்னாக அதிகரிக்க இந்த வளா்ச்சித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் உள்நிதி ஆதாரங்கள் மற்றும் கடன் மூலம் இந்த மூலதனச் செலவு மேற்கொள்ளப்படவுள்ளது.

உலகின் மிகப் பெரிய துத்தநாக உற்பத்தியாளரான ஹிந்துஸ்தான் ஜிங்க், இந்தியாவின் முதன்மை துத்தநாகச் சந்தையில் சுமாா் 74 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப். காலாண்டில், இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 142 சதவீதம் அதிகரித்து, ரூ.6,412 கோடியாகவும்; செயல்பாட்டு வருவாய் 76.5 சதவீதம் அதிகரித்து, ரூ.15,093 கோடியாகவும் பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement