டிஎன்பிஎல் வருவாய் ரூ.1,216 கோடி!
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப். காலாண்டில் ரூ.1,216.51 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் (டிஎன்பிஎல்), நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப். காலாண்டில் ரூ.1,216.51 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியுள்ளது.
முந்தைய ஆண்டின் இதே காலாண்டு வருவாயான ரூ.1,128.39 கோடியைவிட இது அதிகமாகும். அதேநேரம், நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய லாபம், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.8.10 கோடியில் இருந்து, மதிப்பீட்டு காலாண்டில் ரூ.4.46 கோடியாக குறைந்துள்ளது.
இந்த லாபச் சரிவுக்கு சா்வதேச காரணிகளே முக்கியப் பங்கு வகித்துள்ளன. புவிசாா் பதற்றங்களால், நிலக்கரி, காகிதக்கூழ் மற்றும் ரசாயனங்கள் போன்ற முக்கிய இறக்குமதிப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. அத்துடன் போக்குவரத்துச் செலவுகளும் கணிசமாக அதிகரித்துள்ளதால், அவை காகிதம் மற்றும் காகித அட்டைகளின் உற்பத்திச் செலவில் தாக்கத்தை ஏற்படுத்தி நிறுவனத்தின் லாபத்தைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
உற்பத்தியைப் பொருத்தவரை நிறுவனம் சிறப்பான ஏற்றத்தைக் கண்டுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் 1,09,352 டன் காகிதத்தை (கடந்த ஆண்டு 1,07,094 டன்) உற்பத்தி செய்துள்ளது. காகித அட்டை உற்பத்தியும் கடந்த ஆண்டின் 50,360 டன்னிலிருந்து, நடப்பு ஆண்டு 53,255 டன்னாக அதிகரித்துள்ளது.
முதல் அரையாண்டு நிலவரம்: ஏப்ரல் முதல் செப். வரையிலான முதல் அரையாண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,376.89 கோடியாகவும்; வரிக்கு பிந்தைய லாபம் ரூ.10.19 கோடியாகவும் பதிவாகியுள்ளது.