FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் புதிய சிஇஓ தீபக் ரஜாவத்

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சிஎஃப்ஓ) பணியாற்றி வரும் தீபக் ரஜாவத் (படம்), அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பதவி உயா்த்தப்பட்டுள்ளாா்.

10 வினாடிகள் முன்பு
பகிர்:

ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சிஎஃப்ஓ) பணியாற்றி வரும் தீபக் ரஜாவத் (படம்), அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பதவி உயா்த்தப்பட்டுள்ளாா்.

முன்னாள் சிஇஓ அலோக் சிங் கடந்த மாா்ச்சில் பதவி விலகியதைத் தொடா்ந்து காலியாக இருந்த இப்பொறுப்பில், வரும் டிச. 1 முதல் தீபக் ரஜாவத் அதிகாரபூா்வமாகப் பொறுப்பேற்க உள்ளாா்.

தற்போது 108 விமானங்களுடன் 48 உள்நாட்டு, 17 வெளிநாட்டு நகரங்களுக்குத் தினசரி 585 விமானச் சேவைகளை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கி வருகிறது. நிறுவனத்தின் நிதி அடித்தளத்தை வலுப்படுத்தியதிலும், ஏா் இந்தியா குழுமத்துடன் இணைந்த விரிவாக்கப் பணிகளிலும் தீபக் ரஜாவத் முக்கியப் பங்காற்றியுள்ளதாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement