FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பண்டிகைக்கால தங்க விற்பனை 15 முதல் 25% அதிகரிப்பு: உலக தங்க கவுன்சில்

தீபாவளி முன்னிட்டு தங்கத்திற்கான தேவை வலுவாக இருந்தது.

18 நவம்பர் 2026, 10:09 pm
Gold Bar - Center-Center-Delhi
பகிர்:

மும்பை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்திற்கான தேவை தொடர்ந்து வலுவாக இருந்ததாகவும், குறிப்பாக, அக்டோபர் மாத மத்தியில் தங்கத்தின் விலை சரிந்த நிலையில், தங்க விற்பனையின் மதிப்பு 15 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்தது.

தீபாவளியை முன்னிட்டு தங்கத்திற்கான தேவை வலுவாக இருந்ததால், நாடு முழுவதும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் தங்க விற்பனையும் அதிகரித்தது.

Advertisement

Advertisement

அக்டோபர் மாத மத்தியில் தங்கத்தின் விலை குறைந்தது, தங்கத்திற்கான தேவையை மேலும் அதிகரித்தது. தங்க நகைகள் மட்டுமின்றி, தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் ஆகியவற்றின் விற்பனையும் சிறப்பாக இருந்துள்ளதாக உலக தங்க கவுன்சிலின் இந்தியப் பிரிவு ஆராய்ச்சித் தலைவர் கவிதா தெரிவித்துள்ளார்.

மதிப்பின் அடிப்படையில் தங்கத்தின் தேவை ஆண்டுக்கு ஆண்டு 15-25 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் விற்பனை அளவு சற்றே அதிகமாக இருந்ததாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

பழைய தங்க நகைகளைக் கொடுத்து புதிய தங்க நகைகளை வாங்கும் நடைமுறை பெரும்பாலும் சீராகவே இருந்தது. பல கடைகளில், மொத்த விற்பனையில் இத்தகைய பரிமாற்றங்கள் 40 - 60 சதவீதம் வரை இருந்தது. இருப்பினும், சில கடைகளில் பழைய தங்கத்தை மாற்றிப் புதிய நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் சரிவு காணப்பட்டதாக கவிதா தெரிவித்தார்.

தங்கக் கட்டிகள் மற்றும் தங்க நாணயங்களுக்கான தேவையும் சிறப்பாக இருந்தது. பெரும்பாலும் 0.5 கிராம் முதல் 5 கிராம் வரையிலான சிறிய எடை கொண்ட தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்களே அதிக அளவில் விற்பனையாகின.

செப்டம்பர் மாதம் மந்தமான அளவிலிருந்து அக்டோபரில் தங்க இறக்குமதி கணிசமாக மீண்டு, ஆறு மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.

2026 ஜனவரி முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில் தங்க இறக்குமதி 4,736 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் குறைவாகும். அதே சமயம், மொத்த இறக்குமதி அளவு சுமார் 470 டன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

summary

Gold demand remained strong during the Diwali festive period.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.