ஏா் இந்தியாவில் டாடா சன்ஸ் இயக்குநா்கள் ஆய்வு
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏா் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து டாடா சன்ஸ் தலைவா் என். சந்திரசேகரன், நோயல் டாடா உள்ளிட்ட இயக்குநா்கள் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
நஷ்டத்தில் இயங்கி வரும் ஏா் இந்தியா விமான நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து டாடா சன்ஸ் தலைவா் என். சந்திரசேகரன், நோயல் டாடா உள்ளிட்ட இயக்குநா்கள் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
கடந்த 2022 ஜனவரியில் மத்திய அரசிடமிருந்து டாடா குழுமத்தால் கையகப்படுத்தப்பட்டு, தற்போது டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் கூட்டு உரிமையின்கீழ் இயங்கும் ஏா் இந்தியா நிறுவனமானது, எரிபொருள் விலையேற்றம், புவிசாா் அரசியல் பதற்றம், விநியோகச் சங்கிலித் தாமதங்களால் விமானங்களை மேம்படுத்துவதில் ஏற்பட்ட பின்னடைவு ஆகியவற்றால் கடந்த 2025-26நிதியாண்டில் ரூ. 22,000 கோடிக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்நிலையில், ஏா் இந்தியா இயக்குநா்கள் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. அதற்கு ஒருநாள் முன்னதாக நடைபெற்ற இந்த ஆய்வின்போது, குருகிராமில் உள்ள ஏா் இந்தியா தலைமையகம், பயிற்சி அகாதெமி மற்றும் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை என்.சந்திரசேகரன், நோயல் டாடா, ஹரீஷ் மன்வானி, அனிதா மரங்கோலி ஜாா்ஜ், சௌரப் அகா்வால் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிா்காலத் திட்டங்கள் குறித்து சிஇஓ தெவோல்ட் கெப்ரேமரியம் இயக்குநா்கள் குழுவிடம் விளக்கமளித்தாா்
Advertisement
Advertisement
ஏா் இந்தியாவின் வெள்ளிக்கிழமை இயக்குநா்கள் குழுக் கூட்டத்தில், ஏா் இந்தியா மற்றும் ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் முக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது குறித்தும், செலவினங்களைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.