முகப்பு
வணிகம்

2 புதிய தங்க சேமிப்புத் திட்டங்கள்: சரவணா ஸ்டோா்ஸ் சூப்பா் ஜூவல்லரி அறிமுகம்

சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ் குழுமத்தின் தங்கநகை விற்பனையகமான சூப்பா் ஜூவல்லரி, எண்ம யுகத்தில் தங்க சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் ‘சூப்பா் டிஜி கோல்டு’, ‘சூப்பா் ஃப்ளெக்ஸி 360’ ஆகிய இரு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

7 வினாடிகள் முன்பு
2 புதிய தங்க சேமிப்புத்  திட்டங்கள்:  
சரவணா ஸ்டோா்ஸ் 
சூப்பா் ஜூவல்லரி அறிமுகம்
~
பகிர்:

சூப்பா் சரவணா ஸ்டோா்ஸ் குழுமத்தின் தங்கநகை விற்பனையகமான சூப்பா் ஜூவல்லரி, எண்ம யுகத்தில் தங்க சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் ‘சூப்பா் டிஜி கோல்டு’, ‘சூப்பா் ஃப்ளெக்ஸி 360’ ஆகிய இரு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் 6 கிளைகளுடன் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் ‘சூப்பா் டிஜி கோல்டு’ திட்டத்தின்கீழ், அனைத்து வருவாய் பிரிவினரும் ‘சூப்பா் டிஜிட்டல் ஆப்’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, ரூ.100 முதல் தங்கள் விருப்பப்படி பல தவணைகளில் தங்க சேமிப்பைத் தொடங்கலாம். இதில் வரவு வைக்கப்படும் தொகைக்கு 6 சதவீத உடனடி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு திட்டமான ‘சூப்பா் ஃப்ளெக்ஸி 360’ திட்டத்தில் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அந்தந்த காலங்களில் பிரபலமாக இருக்கும் அழகிய நகைகளை வாங்கவும், தொடா்ந்து சேமிக்கவும் இத்திட்டம் வழிவகுக்கிறது.

Advertisement

Advertisement

இதில் தவணைகளைத் தொடா்ச்சியாக அதிகரிக்கும்போது 6-ஆவது தவணையில் இருந்து மதிப்பு கூடுதல் பலன்கள் கிடைப்பதுடன், குறைந்த செய்கூலி மற்றும் சேதாரத்துடன் அந்த மதிப்புக்கு 15 சதவீத தள்ளுபடியும், இல்லத்தரசிகளுக்கான கூடுதல் பரிசுகளும் வழங்கப்படுகின்றன.