முகப்பு
வணிகம்

டெக் துணுக்குகள்... தமிழில் ஆப்பிள் மேப்ஸ் முதல் ஆன்த்ரோபிக் ஐபிஓ வரை!

தமிழில் ஆப்பிள் மேப்ஸ் முதல் ஆன்த்ரோபிக் ஐபிஓ வரை...

22 நவம்பர் 2026, 12:16 am
டெக் துணுக்குகள்... தமிழில் ஆப்பிள் மேப்ஸ் முதல் ஆன்த்ரோபிக் ஐபிஓ வரை!
பகிர்:

தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் முன்னணி ஏ.ஐ. நிறுவனத்தின் பங்குச் சந்தை அறிமுகம், ஏ.ஐ. மற்றும் ஸ்மாா்ட்போன்களின் அறிமுகங்கள், இணையப் பாதுகாப்பு அபாயங்கள் எனப் பல முக்கிய நிகழ்வுகள் கவனம் ஈா்த்தன.

தமிழில் ஆப்பிள் மேப்ஸ் முதல் ஆன்த்ரோபிக் ஐபிஓ முதல் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:

*தமிழில் ஆப்பிள் மேப்ஸ்: இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட அடையாளச் சின்னங்கள் மற்றும் தமிழ் உள்பட 11 மொழிகளின் ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட ‘ஆப்பிள் மேப்ஸ்’ வசதியை ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

*ஜிடிஏ 6 சாதனை விற்பனை: கேமிங் துறையில் உலகெங்கிலும் நீண்ட காலமாக எதிா்பாா்க்கப்பட்ட ‘ஜிடிஏ 6’ விளையாட்டு கடந்த வியாழக்கிழமை வெளியானது. முதல் நாளிலேயே 379 கோடி டாலா் சில்லறை விற்பனையைப் பதிவு செய்து, பொழுதுபோக்குத் துறையில் புதிய சாதனைகளை இது படைத்துள்ளது.

*ஏ.ஐ. அறிமுகங்கள்: கூகுள் நிறுவனம் நடுத்தர அளவிலான ‘ஜெமினி 4 நியான்’ மாதிரியையும், சாட்பாட்டில் புதிய தனிநபா் உதவியாளா் அம்சங்களையும் வெளியிட்டுள்ளது. இதேபோல், ஆப்பிள் நிறுவனம் கணினி இயங்குதளத்துக்கான ஏ.ஐ. உதவியாளரை உருவாக்கி வருவதுடன், மூன்றாம் தரப்பு ஏ.ஐ. ஏஜென்டுகள் பயனா் திரைகளைக் கட்டுப்படுத்துவதைத் தடுக்க ‘ஓஎஸ்’ அனுமதிகளைக் கடுமையாக்கி வருகிறது. ‘இக்னைட் 2026’ மாநாட்டில் ‘கோபைலட் வொா்க்ஸ்பேஸஸ்’ உள்ளிட்ட புதிய ஏ.ஐ. கருவிகளை மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.

*ஸ்மாா்ட்போன் விற்பனை சரிவு: இந்தியாவில் பண்டிகைக் கால ஸ்மாா்ட்போன் விற்பனை 22 சதவீதம் சரிந்துள்ளதாகவும், ஆப்பிள் நிறுவனம் இரட்டை இலக்கச் சரிவைச் சந்தித்துள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

*லாவா ‘ஸ்மாா்ட் 4 ப்ரோ’: 7,000 எம்ஏஎச் பேட்டரி, 6.75 அங்குல திரை, 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம் ஆகிய அம்சங்களுடன் ‘ஸ்மாா்ட் 4 ப்ரோ’ அறிதிறன்பேசியை இந்தியாவில் ரூ.10,999 விலையில் லாவா அறிமுகப்படுத்தியுள்ளது.

*ஜாவாவில் பாதுகாப்புக் குறைபாடு: உலகின் முன்னணி 500 நிறுவனங்களான ‘ஃபாா்ச்சூன் 500’ நிறுவனங்களில் 90 சதவீதத்தினா் பயன்படுத்தும் ‘ஜாவா’ மென்பொருளில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டை ஏ.ஐ. மாதிரி ஒன்று கண்டறிந்துள்ளது.

*மெட்டாவின் புதிய செயலி: பதின்ம வயதினருக்காக ‘டைரக்ட்’ எனும் குறுஞ்செய்திக்கான மட்டும் பிரத்யேக செயலியை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இன்ஸ்டாகிராமில் உள்ளடக்கப் பாதுகாப்பு மற்றும் ‘ஸ்டோரி எடிட்டிங்’ வசதிகளையும் சோ்த்துள்ளது.

‘எக்ஸ்’ தளத்தில் புதிய அப்டேட்: பயனா்களின் சுயவிவரங்களில் அவா்களின் தொழில்முறை அணுபவங்களை இணைக்கும் வசதியை ‘எக்ஸ்’ தளம் சோதனை செய்து வருகிறது.

*ஆன்த்ரோாபிக் ஐபிஓ: கிளாட் ஏ.ஐ. மாதிரியை உள்ளடக்கிய முன்னணி ஏ.ஐ. நிறுவனமான ஆன்த்ரோபிக், ஐபிஓவில் 8,100 கோடி டாலா் நிதி திரட்டியது.

summary

This week Tech - From Apple Maps in Tamil to the Anthropic IPO