தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு லுலு குழும தலைவர் வாழ்த்து!!
தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு லுலு குழும தலைவர் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் புதிய தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு லுலு குழும தலைவர் எம்.ஏ. யூசுஃப் அலி தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், புதிய தேசிய வணிக நாளிதழான தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) அறிமுகம் செய்திருக்கிறது.
புதிய தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு லுலு குழும தலைவர் எம்.ஏ. யூசுஃப் அலி வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில்,
Advertisement
Advertisement
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ குழுமம் கொச்சியிலிருந்து ஒரு புதிய வணிக நாளிதழைத் தொடங்குகிறது என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
உலகமே இந்தியாவை உன்னிப்பாகக் கவனித்து வரும் இவ்வேளையில், நம் நாடு சிறந்த பொருளாதார முன்னேற்றத்தை அடைந்து வருவதுடன், தனது மனித வளத்தையும் மூலப்பொருள்களின் விநியோகத்தையும் வலுப்படுத்தி வருகிறது.
ஒருபுறம், இந்தியா 140 கோடி நுகர்வோரைக் கொண்ட ஒரு பரந்த சந்தையாக உள்ளதுடன், சில்லறை விற்பனைத் துறையும் (retail sector) அபரிமிதமாக வளர்ந்து வருகிறது; மறுபுறம், உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்குத் தரமான பொருள்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
ஒரு புதிய வணிக நாளிதழைத் தொடங்குவதற்கு இதைவிடச் சிறந்த தருணம் இருக்க முடியாது. குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.