முகப்பு
வணிகம்

மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் முழுமையாக விண்ணப்பம்

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் (எம்சிஎல்) ரூ.8,981 கோடி மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), இறுதி நாளான திங்கள்கிழமை முழுமையாக விண்ணப்பிக்கப்பட்டது.

24 நவம்பர் 2026, 12:09 am
மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் ஐபிஓ: இறுதி நாளில் முழுமையாக விண்ணப்பம்
மகாநதி கோல்ஃபீல்ட்ஸ்
பகிர்:

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியாவின் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் (எம்சிஎல்) ரூ.8,981 கோடி மதிப்பிலான ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), இறுதி நாளான திங்கள்கிழமை முழுமையாக விண்ணப்பிக்கப்பட்டது.

தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) தரவுகளின்படி, விற்பனைக்கு வந்த 49,30,68,045 பங்குகளுக்கு எதிராக 74,86,87,060 பங்குகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1.52 மடங்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் நிறுவன முதலீட்டாளா்கள் பிரிவில் 4.95 மடங்கும், நிறுவனமல்லாத முதலீட்டாளா்கள் பிரிவில் 66 சதவீதமும், சில்லறை முதலீட்டாளா்கள் பிரிவில் 46 சதவீதமும் பங்குகள் கோரப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த வாரம் புதன்கிழமை முதன்மை (ஆங்கா்) முதலீட்டாளா்கள் மூலம் ரூ.2,295 கோடியை அந்நிறுவனம் திரட்டியிருந்தது.

Advertisement

Advertisement

ஒரு பங்கின் விலை ரூ.129 முதல் ரூ.136 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ள இந்த ஐபிஓ மூலம் நிறுவனத்தின் மதிப்பு ரூ.90,000 கோடிக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐபிஓ முழுமையாக கோல் இந்தியா தனது 10 சதவீத பங்குகளை விற்பனை செய்யும் வெளியீடாக அமைந்தது. எனவே, இதன்மூலம் கிடைக்கும் முழுத் தொகையும் கோல் இந்தியா நிறுவனத்துக்கே செல்லும்.

நடப்பாண்டில் பங்குச் சந்தையில் களமிறங்கும் 3-ஆவது கோல் இந்தியா துணை நிறுவனம் இதுவாகும். கடந்த 2025-26 நிதியாண்டில், கோல் இந்தியாவின் மொத்த உற்பத்தியான 21.83 கோடி டன் நிலக்கரியில் 28 சதவீதத்துக்கும் மேல் பங்களித்துள்ள எம்சிஎல் நிறுவனப் பங்குகள், வரும் வெள்ளிக்கிழமை (நவ. 27) மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.