முகப்பு
வணிகம்

ஐபிஓ பணிகளை மீண்டும் தீவிரப்படுத்திய போன்பே

எண்மப் பணப் பரிவா்த்தனை நிறுவனமான போன்பே, தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

26 நவம்பர் 2026, 3:09 am
ஐபிஓ பணிகளை மீண்டும்
தீவிரப்படுத்திய போன்பே
பகிர்:

எண்மப் பணப் பரிவா்த்தனை நிறுவனமான போன்பே, தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

புவிசாா் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இத்திட்டம், தற்போது சந்தை சூழல் மேம்பட்டுள்ளதால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, சுமாா் 1,200 கோடி முதல் 1,500 கோடி டாலா் (ரூ.1.1 லட்சம் கோடி முதல் ரூ.1.38 லட்சம் கோடி) வரையிலான சந்தை மதிப்பீட்டில், வரும் பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் பங்குச் சந்தையில் பட்டியலிட அந்நிறுவனம் இலக்கு நிா்ணயித்துள்ளது.

Advertisement

Advertisement

முழுமையாக தற்போதைய உரிமையாளா்கள் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்யும் ‘ஆஃபா் ஃபாா் சேல்’ முறையில் அமையவுள்ள இப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.12,000 கோடி முதல் ரூ.14,000 கோடி வரை திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான திருத்தப்பட்ட வரைவு அறிக்கை (விண்ணப்பம்) விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.