முகப்பு

அந்நியச் செலாவணி கையிறுப்பு 70,100 கோடி டாலராக சரிவு!

இந்திய அந்நியச் செலாவணிக் கையிருப்பு 444.3 கோடி டாலர் குறைந்து 70,089.8 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

27 நவம்பர் 2026, 7:29 pm
அந்நியச் செலாவணி கையிறுப்பு 70,100 கோடி டாலராக சரிவு!
ரிசர்வ் வங்கி | RBI
பகிர்:

மும்பை: நவம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 444.3 கோடி டாலர் குறைந்து 70,089.8 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்தது.

இதுவே கடந்த வாரத்தில், அதன் ஒட்டுமொத்த கையிருப்பு 1,420.5 கோடி டாலர் குறைந்து 70,534.2 கோடி டாலராக இருந்தது.

நவம்பர் 20ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், நாட்டின் அந்நியச் செலாவணி சொத்து 26.6 கோடி டாலர் குறைந்து 58,318.6 கோடி டாலராக இருப்பதாக தெரிவித்தது.

Advertisement

Advertisement

தங்கக் கையிருப்பின் மதிப்பு தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடுமையாகச் சரிந்து, 409.5 கோடி டாலர் குறைந்து 9,451.9 கோடி டாலராக உள்ளது. அதே வேலையில், சிறப்பு வரைதல் உரிமைகள் கீழ் 6.7 கோடி டாலர் சரிந்தது 1,845.1 கோடி டாலராக உள்ளது என்றது.

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு நிலையும் 1.5 கோடி டாலர் குறைந்து 474.3 கோடி டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

summary

India's forex reserves dropped to USD 700.898 billion in the week ended November 20.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.