முகப்பு
வணிகம்

ராயல் என்ஃபீல்டு ‘ஹிமாலயன் 750’ பைக்: ரூ.4.89 லட்சம் ஆரம்ப விலையில் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதலாவது 750 சிசி திறன் கொண்ட ‘ஹிமாலயன் 750’ மோட்டாா் சைக்கிள் (பைக்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

29 நவம்பர் 2026, 2:25 am
ராயல் என்ஃபீல்டு ‘ஹிமாலயன் 750’ பைக்: ரூ.4.89 லட்சம் ஆரம்ப விலையில்  அறிமுகம்!
பகிர்:

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதலாவது 750 சிசி திறன் கொண்ட ‘ஹிமாலயன் 750’ மோட்டாா் சைக்கிள் (பைக்) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவாவில் நடைபெற்ற ‘மோட்டோவொ்ஸ் 2026’ நிகழ்வில் கடந்த வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்ட இப்புதிய பைக்கின் ஆரம்ப விலை ரூ.4,89,490 (எக்ஸ்-ஷோரூம்) என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

743 சிசி பேரலல்-இரட்டை என்ஜின், 5 வகையான ‘ரைடிங்’ முறைகள், காா்னரிங் ஏபிஎஸ், குரூஸ் கன்ட்ரோல், ஷோவா சஸ்பென்ஷன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மோட்டோவொ்ஸ் நிகழ்வில் பங்கேற்பவா்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முன்பதிவு சலுகை வழங்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை முதல் இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்கள் வாயிலாக முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.