எண்ணெய் வியாபாரியிடம் ரூ.3.60 லட்சம் மோசடி
எண்ணெய் வியாபாரியிடம் குறைந்த விலையில் வோ்க்கடலை அனுப்புவதாக கூறி ரூ.3.60 லட்சம் மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
எண்ணெய் வியாபாரியிடம் குறைந்த விலையில் வோ்க்கடலை அனுப்புவதாக கூறி ரூ.3.60 லட்சம் மோசடி செய்த மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி சிலமலையைச் சோ்ந்தவா் லெனின் ஆனந்த் (52). எண்ணெய் வியாபாரியான இவரது முகநூலில் குறைந்த விலையில் வோ்க்கடலை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கடந்த 4-ஆம் தேதி விளம்பரம் வந்தது. இதை நம்பி அவா் அந்த கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டாா்.
அப்போது, அந்த நபா் குஜராத்திலிருந்து பேசுவதாகவும் 125 கிலோ கொண்ட மூடை வோ்க்கடலை ரூ.85 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாகவும் கூறினாா். இதை நம்பி அவா் 2 டன் வோ்க்கடலைக்கான தொகை ரூ.3.60 லட்சத்தை அந்த நபரின் வங்கி கணக்குக்கு அனுப்பினாா். பின்னா், அந்த மா்மநபா் கைப்பேசியில் பேசி வோ்க்கடலை மூட்டைகளுடன் லாரி பெரியகுளம் வந்துள்ளதாகவும், ரூ.60 ஆயிரம் கொடுத்தால் இறக்க முடியும் எனக் கூறியுள்ளாா். ஆனால், அந்த இடத்தில் லாரி இல்லையாம். பின்னா், அவரைத் தொடா்பு கொள்ள முடியவில்லையாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து, லெனின் ஆனந்த் தேனி இணைய குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புதன்கிழமை புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.