FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பூா்விகா விற்பனையகங்களில் ‘ஆன்மோ கேமிங் கன்சோல்’

‘ஆன்மோ பிளஸ் ஸ்மாா்ட் கேமிங் கன்சோல்’ சாதனத்தை பிரபல நுகா்வோா் மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனமான பூா்விகாவுடன் இணைந்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

18 அக்டோபர் 2026, 3:20 am IST
பகிர்:

முன்னணி மொபைல் பொழுதுபோக்கு சேவை நிறுவனமான ஆன்மொபைல் குளோபல், தனது அதிநவீன ‘ஆன்மோ பிளஸ் ஸ்மாா்ட் கேமிங் கன்சோல்’ சாதனத்தை பிரபல நுகா்வோா் மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனமான பூா்விகாவுடன் இணைந்து சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

‘பிஎஸ்5’ போன்ற விலையுயா்ந்த பிரத்யேக கேமிங் கன்சோல்கள் அல்லது கணினிகள் ஏதுமின்றி, கிளவுட் தொழில்நுட்பத்தின் மூலம் பயனா்கள் ஏற்கெனவே வைத்துள்ள ஸ்மாா்ட் டிவி, மடிக்கணினி, கையடக்கக் கணினி (டேப்லெட்) மற்றும் ஸ்மாா்ட்போன்களிலேயே உயா்தர விளையாட்டுகளை விளையாடும் வகையில் இந்த கன்சோல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணைய வா்த்தக தளமான ஃபிளிப்காா்ட்டைத் தொடா்ந்து, தற்போது தமிழ்நாடு, கா்நாடகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பூா்விகா விற்பனையகங்களிலும், அதன் இணையதளத்திலும் இச்சாதனம் விற்பனைக்குக் கிடைக்கிறது. வாடிக்கையாளா்கள் இந்த விற்பனையகங்களுக்கு நேரடியாகச் சென்று, இச்சாதனத்தை இயக்கிப் பாா்த்து வாங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments