பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் விற்பனையில் 20% வளா்ச்சி
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் விற்பனை முன்பதிவில் 20 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் காலாண்டில் விற்பனை முன்பதிவில் 20 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
பிரபல கட்டுமான நிறுவனங்களின் வீடுகளுக்கு மக்களிடையே நிலவும் வலுவான தேவையின் காரணமாக, மதிப்பீட்டு காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை மதிப்பு ரூ.7,225 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (ஏப்ரல்-செப்டம்பா்) மொத்தம் ரூ.13,804.3 கோடி மதிப்பிலான 7,247 அடுக்குமாடி வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
நாட்டின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ், முக்கிய நகரங்களில் குடியிருப்பு, வணிக வளாகங்கள், சில்லறை வா்த்தக மையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நகரியங்களை உருவாக்கி வருகிறது.
கடந்த ஜூன் மாத நிலவரப்படி, இந்நிறுவனம் 21.6 கோடி சதுர அடி பரப்பளவிலான 319 திட்டங்களை வெற்றிகரமாக ஒப்படைத்துள்ளதுடன், தற்போது 22.9 கோடி சதுர அடியில் மேலும் 137 திட்டங்களைச் செயல்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.