FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வங்கி, நிதிப் பங்குகள் சரிவு எதிரொலி: வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!

சென்செக்ஸ் 143.21 புள்ளிகள் சரிந்து, 73,709.69 புள்ளிகளாகவும், நிஃப்டி 77.60 புள்ளிகள் சரிந்து 22,811.35 புள்ளிகளாக நிறைவடைந்தது.

53 வினாடிகள் முன்பு
கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை
பகிர்:

மும்பை: மின்சாரம், வங்கி மற்றும் நிதிப் பங்குகளில் ஏற்பட்ட தொடர் விற்பனை மற்றும் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையால், கரடிகளின் ஆதிக்கம் மேலோங்கியதால் ஒட்டுமொத்த பங்குச் சந்தை 2 வது நாளாக சரிவுடன் முடிவடைந்தன.

அதிகரித்து வரும் அமெரிக்கப் பத்திர வருவாய் மற்றும் தொடர்ச்சியான வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் விற்பனையும் வர்த்தகச் சூழலை பின் நோக்கி பயணிக்க வைத்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், இந்தக் குறியீடு ஏற்றத்துடன் தொடங்கி 829.29 புள்ளிகள் உயர்ந்தது. பிறகான வர்த்தகத்தில் அதிகபட்சமாக 74,682.19 புள்ளிகளையும் குறைந்தபட்சமாக 73,229.45 புள்ளிகளை எட்டியது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 143.21 புள்ளிகள் சரிந்து, 73,709.69 புள்ளிகளாகவும், 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 77.60 புள்ளிகள் சரிந்து 22,811.35 புள்ளிகளாக நிறைவடைந்தது.

Advertisement

Advertisement

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், ட்ரென்ட், ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, மாருதி சுசுகி இந்தியா, இண்டிகோ, கோடக் மஹிந்திரா வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், டைட்டன் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் சரிந்தும் மறுபுறம் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், பார்தி ஏர்டெல், பவர்கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் சன் பார்மாசூட்டிகல்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

இதற்கிடையில், ரூ. 30,213 கோடி மதிப்பிலான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் ஐபிஓ, இன்றைய (புதன்கிழமை) ஏலத்தின் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட 3 மடங்கு சந்தா பெறப்பட்டதாக நிறுவனம் அறிவித்தது. இந்தியாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பொதுப் பங்களிப்பான ஜியோ ஐபிஓ, தொடங்கிய 100 நிமிடங்களுக்குள் முழு சந்தாவைப் பெற்ற அதிவேக ஐபிஓ என்ற சாதனையைப் படைத்தது.

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும், அத்துடன் இந்தியா-அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் குறித்த நம்பிக்கையை முதலீட்டாளர்களிடம் மறைத்ததால், இந்தியப் பங்குகள் தங்களின் வலுவான நிலையை இழக்க செய்தது.

நிறுவனங்களின் 2 வது காலாண்டு வருவாய் மற்றும் வலுவான உள்நாட்டு நிறுவன முதலீட்டு உள்ளிட்டவை பங்குச் சந்தைக்கு முக்கிய ஊன்றுகோலாக அமைந்தது.

இதற்கிடையில், பணவீக்கம் குறித்த அச்சமும், இந்திய சந்தைகளிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை திரும்ப பெறுவது பங்குச்சந்தை தொடர் சரிவிலேயே இருக்க முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

ஆசிய சந்தை கலவையான நிலையில் முடிவடைந்தன. தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஜப்பானின் நிக்கெய் 225 குறியீடுகள் உயர்வுடன் நிலைபெற்றது. ஹாங்காங்கின் ஹாங் செங் மற்றும் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பிய சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச் சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தன.

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய முன்தினம் (திங்களன்று) ரூ. 1,148.64 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்த நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 3,201.19 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 111 அமெரிக்க டாலர் என்ற அளவை கடந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Equity benchmark indices extended their losses for a second straight session on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments