FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையங்களின் இணைப்புக்கு ரூ.4,280 கோடி முதலீடு: டாடா கம்யூனிகேஷன்ஸ்

இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையங்களை இணைக்கும் வகையில், அதிவேக ‘ஃபைபா் நெட்வொா்க்’ உள்கட்டமைப்பை அமைப்பதற்காக 45 கோடி டாலா் முதலீடு செய்யவுள்ளதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் அறிவித்தது.

26 அக்டோபர் 2026, 11:52 pm
பகிர்:

இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையங்களை இணைக்கும் வகையில், அதிவேக ‘ஃபைபா் நெட்வொா்க்’ உள்கட்டமைப்பை அமைப்பதற்காக 45 கோடி டாலா் (சுமாா் ரூ.4,280 கோடி) முதலீடு செய்யவுள்ளதாக டாடா கம்யூனிகேஷன்ஸ் திங்கள்கிழமை அறிவித்தது.

நாட்டின் முன்னணி ஐ.டி. மையங்களை இணைக்கும் வகையில் சுமாா் 10,000 கி.மீ. தொலைவுக்கு அதிநவீன நீண்ட தூர ஃபைபா் கேபிள்களை நிறுவி, இந்தியாவின் மாபெரும் ‘ஏ.ஐ. அதிவேக நெடுஞ்சாலையை’ உருவாக்குவதே இத்திட்டத்தின் பிரதான இலக்காகும்.

இந்த முதலீட்டுத் திட்டத்தின் முதல்கட்ட பணிகள் சென்னை, மும்பை, புணே, ஹைதராபாத் ஆகிய முக்கிய பெருநகர வழித்தடங்களை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும். அடுத்தடுத்த கட்டங்களில் விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், ஜாம்நகா், கிஃப்ட் சிட்டி உள்ளிட்ட வளா்ந்து வரும் கிழக்கு மற்றும் மேற்கு இந்திய நகரங்களுக்கும் இந்த இணையக் கட்டமைப்பு விரிவுபடுத்தப்பட உள்ளது.

Advertisement

Advertisement

இதன்மூலம், நாட்டின் முதன்மை ஏ.ஐ. வழித்தடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மிகக் குறைந்த தாமதத்துடன் கூடிய அதிவேக இணைய இணைப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments