புது லுக்கில் பலேனோ... ரூ. 6.10 லட்சத்தில் அறிமுகம்! என்னென்ன புதுசு?
மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் பலேனோ அறிமுகம்..
மாருதி சுஸுகி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட 2026 பலேனோ காரை ரூ.6.10 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தோற்றம், கூடுதல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன், புதிய பெட்ரோல் என்ஜினும் இந்த மாடலில் இடம்பெற்றுள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
Advertisement
Advertisement
புதிய 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 83 ஹெச்பி பவரையும், 112 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் வழங்குகிறது. 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளன. சிஎன்ஜி மாடலும் தொடர்ந்து கிடைக்கிறது.
பாதுகாப்பில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் போன்றவை அடிப்படை மாடலிலேயே வழங்கப்பட்டுள்ளன. வேரியண்ட்களுக்கு ஏற்ப டயர் பிரஷர் மானிட்டரிங், 9 அங்குல தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜர், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப்டிஸ்பிளே, குரூஸ் கண்ட்ரோல், முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள் கிடைக்கின்றன.
டாப் ஆல்பா(O) மாடலில் லெவல் - 2 ஏடிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. இதில் அடாப்டிவ் குரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், லேன் டிபார்ச்சர் வார்னிங், அவசரக் கால தானியங்கி பிரேக்கிங் போன்ற பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
புதிய பலேனோவின் விலை ரூ. 6.10 லட்சத்தில் தொடங்கி ரூ. 9.55 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.