ரூ. 14.67 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ் ஆட்டோமேட்டிக்! என்ன ஸ்பெஷல்?
கியா கேரன்ஸ் கிளாவிஸ் பற்றி...
கியா நிறுவனம், கேரனஸ் கிளாவிஸ் காரில் குறைந்த விலை வேரியன்ட்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வசதியை விரிவுபடுத்தியுள்ளது.
அதன்படி, எச்டிஇ (ஒ) மற்றும் எச்டிஇ (இஎக்ஸ்) வேரியண்ட்களில் புதிய ஆட்டோமேட்டிக் மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இதனால் கேரன்ஸ் கிளாவிஸ் ஆட்டோமேட்டிக் மாடலை இனி ரூ. 14.67 லட்சத்தில் வாங்கலாம்.
மேலும், கியா நிறுவனம் ரூ. 15.82 லட்சம் விலையில் HTE(O) டீசல் ஆட்டோமேட்டிக் மாடலையும், அதே சமயம், HTE(EX) டிரிம் மாடலில் ரூ. 15.22 லட்சம் விலையில் புதிய டர்போ-பெட்ரோல் DCT ஆப்ஷனும் கிடைக்கிறது. HTE (O) டீசல் வேரியன்ட் ரூ. 15.82 லட்சத்தில் கிடைக்கிறது.
Advertisement
Advertisement
இந்தப் புதிய ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களில் மோஷன் சென்சாருடன் கூடிய ஸ்மார்ட் கீ, புஷ்பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஈக்கோ, நார்மல், ஸ்போர்ட் டிரைவ் மோடுகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ரிமோட் என்ஜின் ஸ்மார்ட் போன்ற வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனால், அதிக விலை வேரியண்ட்களுக்குச் செல்லாமல், மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட கேரன்ஸ் கிளாவிஸில் ஆட்டோமேடிக் வசதியைக் குறைந்த விலையில் தேர்வு செய்ய முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.